அலகாபாத் பல்கலையில் எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம் அறிமுகம்

0
62

பிரயாக்ராஜில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலை அமைந்துள்ளது. வணிகவியல் துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ., — எம்.பி.ஏ., படிப்பு துவங்கப்பட்டுஉள்ளது. இதில், முதல் ஆண்டுடன் ஒருவர் வெளியேறினால் ஓராண்டு சான்றிதழும், இரண்டாண்டுடன் வெளியேறினால் டிப்ளமா சான்றும், மூன்றாம் ஆண்டில் வெளியேறினால் பி.பி.ஏ., சான்றும் கிடைக்கும். இந்த ஒருங்கிணைந்த பி.பி.ஏ., – எம்.பி.ஏ., படிப்பில் மாணவர்கள், பகவான் கிருஷ்ணர் கையாண்ட நிர்வாக மேலாண்மை குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இவற்றை பகவத் கீதை, உபநிஷதங்கள் வாயிலாக மாணவர்கள் பயில உள்ளனர். சாணக்கியரின் நிர்வாக யுக்திகள் குறித்த பாடமும் சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, மனதை அமைதிப்படுத்த அஷ்தங்க யோகாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here