குஜராத்தின் சூரத்தை சேர்ந்த ஓஜாஸ்வி அறக்கட்டளை, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயை மையமாக வைத்து, ‘வின்சர் எப்எக்ஸ்’ என்ற பெயரில் சட்டவிரோதமாக அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. நிறுவனங்களுக்கு சொந்தமாக சூரத்தில் உள்ள, 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 1.33 கோடி ரூபாய், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 8 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி, சட்ட விரோதமாக மாற்றப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 150 கோடி ரூபாய் ஹவாலா முறையில் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.