‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையின் 751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

0
87

புதுடெல்லி,
நாட்டின் முதல் பிரதமரால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை ‘நேஷனல் ஹெரால்டு’ ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதன் பதிப்பு நிறுவனமான ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை, ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ அபகரித்து விட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் திருமதி சோனியா காந்தி, திரு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ‘யங் இந்தியா’ நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here