இயக்குநர் மாரி செல்வராஜ் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கும் உள்ளதா தமிழக அரசு ?

0
1326

தீவிர கன மழையால், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்டதென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பஸ் பாதைகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புயல், நிவாரண பணிகளின் போது தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன், திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூம் சேர்ந்து மீட்பு பணிகளை பார்வையிடுவதுடன், அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் உதயநிதி நடித்த படத்தை இயக்கியவர் என்ற ஒரே காரணத்தினால், அவர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க முடியுமா? இதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here