ஐரோப்பிய நாடான மால்டாவுக்கு சொந்தமான, ‘எம்.வி.ரூயன்’ என்ற சரக்கு கப்பல், கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதி அருகே சென்றபோது கடற்கொள்ளையர்கள், அதை கடத்திச் சென்றனர். உடனடியாக இது குறித்து கப்பலின் கேப்டன், அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிற நாட்டு போர்க் கப்பல்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, ஏடன் வளைகுடா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கடற்படை போர்க் கப்பல் மற்றும் விமானங்கள் அங்கு சென்றனர். இன்று கடற்படையினரின் அதிரடி நடவடிக்கையில் சரக்கு கப்பல் மீட்கப்ப்டடது.