சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி – நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு

0
303

சொத்துக்குவிப்பு வழக்கில் இந்த வழக்கை விசாரித்த, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து, 2016 ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். இந்த வழக்கில் இருவருக்கும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மனைவி விசாலாட்சிக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால் அவர் பதவி இழப்பார் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here