இரமண_மஹரிஷி பிறந்த தினம்

0
103

இரமண மஹரிஷி டிசம்பர் 30, 1879 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும்.விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், மாமரக் குகை, குருமூர்த்தம் எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலை அடிவாரத்தில் தங்கினார்.அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”இரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர். கையில் ஏற்பட்ட கொடிய சார்கோமா புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். 1950ல் முக்தி அடைந்தார்.ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922-ல் அவரது தாயின் தேகமறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் தாயார் சமாதி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கலானார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும்.

#ramanamaharshi #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here