திருவண்ணாமலை மாவட்டம் அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து ஏபிஜிபி மூலமாக சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து காட்பாடி வழியாக சென்னைக்கும் இரண்டு ரயில்கள் சுற்றுவட்ட பாதையில் தினசரி ரயில்கள் இயக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை நகரத்தில் ஒருங்கிணைப்பாளர் வி.கே.சீனிவாசன், இணை ஒருங்கிணைப்பாளர் என்.சம்பத், அமிர்தலிங்கம் ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று பக்தர்களின் வசதிக்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த சிறப்பு ரயில்களும் டிசம்பர் 2023 உடன் முடிவடைந்து விட்டது.ஜனவரி 2024 முதல் ரயில்வே துறையில் இருந்து அட்டவணை வெளியிடப்படவில்லை. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தொடர்ந்து சிறப்பு ரயில்கள் இயக்க ஜனவரி முதல் சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை வெளியிட வேண்டும். அத்துடன் ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வசதிக்காக தொடர்ந்து தினசரி ரயில்கள் இயக்க வலியுறுத்தி ஒரு லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெற்று ரயில்வே ஆணையத்திற்கு ஏபிஜிபி மூலம் ஆன்மீக பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது.
Home Breaking News ஆன்மீக நகரத்திற்கு சுற்றுவட்ட பாதையில் தினசரி ரயில் விட கோரி ஏபிஜிபி மூலம் ஒரு லட்சம்...