பதஞ்சலி_சாஸ்திரி பிறந்த தினம் இன்று

0
333

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மூத்த சமஸ்கிருத அறிஞரான கிருஷ்ண சாஸ்திரியின் மகனாக, மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி ஜனவரி 4, 1889 ஆண்டு பிறந்தார். சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கலையிலும், சட்டத்திலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் ஆற்றி வந்தார். 1939 ல் உயர்நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 6, 1947-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951இல் பொறுப்பேற்றார். இப்பதவியில் சனவரி 3, 1954 வரை பணியாற்றினார்.
#PatanjaliSastri #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here