உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞர் பாலிசாம்_நரிமன் பிறந்த தினம் இன்று

0
102

ஃபாலி சாம் நாரிமன் 10 ஜனவரி 1929 ல் பிறந்தார். உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞர். 1971 முதல் இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருந்த அவர் 1991 முதல் 2010 வரை இந்திய பார் அசோசியேஷனின் தலைவராக இருந்தார். 1950-ல் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தம் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். பல உயரிய பதவிகளை வகித்தார். நீதித்துறையிலும் அரசியல் துறையிலும் அவருடைய கருத்துகள் செவிமடுக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினார்.பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான 19 வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது 2018-ல் வழங்கப்பட்டது. அவர் மே 1972 முதல் ஜூன் 1975 வரை இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். அவருக்கு பத்ம பூஷண் (1991), பத்ம விபூஷன் (2007) மற்றும் நீதிக்கான Gruber Prize (2002) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்துள்ளார். #falisamnariman #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here