குடியரசு தினம்: 1,132 பேருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிப்பு

0
126

குடியரசு தினத்தையொட்டி, போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட 1132 பேருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சேவை சிறந்த சேவை புரிந்ததற்காக தமிழகத்தை சேர்ந்த 3 போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த 26 போலீசாரின் பணியை பாராட்டி மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியமாமணி விருதுகள் அறிவிப்பு 2022, 2023ம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்தது. இலக்கியமாமணி விருது 2022ம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரங்க. இராமலிங்கம்- வயது 68 (மரபுத்தமிழ்). விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் வயது 83 (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) – வயது 67 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றுள்ளனர். இலக்கியமாமணி விருது 2022ம் ஆண்டிற்கு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன்- வயது 94 (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் வயது 73 (ஆய்வுத்தமிழ்). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் -வயது 64 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கியமாமணி விருதாளர்களுக்கு ரூ.5லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here