ரஷ்ய மாணவர் தினத்தில் பிரதமரின் தலைமைப் பண்புகள் – அதிபர் புடின் பாராட்டு

0
170

ரஷ்ய மாணவர் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடும் போது புடின் கூறும் போது, உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. அதற்கு, தற்போதைய பிரதமரின் தலைமைப் பண்புகள் காரணம் ஆகும். அவரது தலைமையில் தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை எட்டி உள்ளது. சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளதால், இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷ்யா நம்பியிருக்க முடியும். இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக ரஷ்யா கருதுகிறது. இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கிறது. இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. கூட்டுப்பணியை ஒழுங்கமைப்பதில் இருந்து முக்கியமானது. மேற்குலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது . இவ்வாறு புடின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here