அகில இந்திய சாதனைக் கலைஞர்களின் சங்கமம் 2024 – RSS அகில பாரத தலைவர் வருகை

0
90

பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் வருகிற பிப்ரவரி 01 முதல் 04, 2024 வரை சாதனைக் கலைஞர்களின் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் பிரதிநிதிகள் மற்றும் கலை ஆர்வலர்கள் சங்கமத்தில் கூடுவார்கள். இம்முறை இந்த சாதனைக் கலைஞர்களின் சங்கமத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள் மற்றும் கலைஞர்கள் கலை, இலக்கியம் மூலம் ‘சமூக நல்லிணக்கம்’ என்ற பொருளில் பல்வேறு அம்சங்களில் செய்திகளை வழங்கவுள்ளனர்.மைசூர் வம்சத்தின் மாண்புமிகு மன்னர் யதுவீர் வாடியார் ஜி, கலைகளைக் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதில் புகழ்பெற்றவர். அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். விஜயநகரப் பேரரசின் வம்சாவளியைச் சேர்ந்த மாண்புமிகு ஸ்ரீ கிருஷ்ணதேவராயாஜி அவர்கள் 4 நாள் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர் பத்மஸ்ரீ மஞ்சம்மா ஜோக்தி ஜி, மூத்த தபேலா கலைஞர் ரவீந்திர யவகல்ஜி மற்றும் வரலாற்றாசிரியர் டாக்டர் விக்ரம் சம்பத் ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.நிகழ்ச்சியில் 2 நாட்கள் (பிப்ரவரி 3 மற்றும் 4) பரமபூஜனீய சர்சங்கசாலக் மாண்புமிகு மோகன்ஜி பாகவத் அவர்களும் கலந்து கொள்வார். பரத்முனி விருது விழாவில் ‘காட்சி கலை’ மற்றும் ‘நாட்டுப்புற கலை’களில் புகழ்பெற்ற இரண்டு கலைஞர்களை அவர் கவுரவிப்பார். ஆன்மீக குரு ஸ்ரீ.ஸ்ரீ ரவிசங்கர் ஜி அவர்களின் ஆசியுடனும் ஸ்ரீ மோகன் ஜி பாகவத்தின் இறுதி உரையுடனும் 4 நாள் நிகழ்ச்சி நிறைவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here