அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை ரூ.11½ கோடி நன்கொடை

0
211

அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை ரூ.11½ கோடி நன்கொடை
உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் ப்ராணப் பிரதிஷ்டை கடந்த மாதம் 22-ந் தேதி நடந்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.இந்த நிலையில் கடந்த 11 நாட்களில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துள்ளதாக கோவில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. மேலும் பக்தர்களிடம் இருந்து காணிக்கை மற்றும் நன்கொடையாக இதுவரை ரூ.11½ கோடி கிடைத்துள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here