மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்த இடம் லாக்ஷாக்ருஹ (Lakshagarh). இங்குதான் பாண்டவர்களைக் கொலை செய்ய கௌரவர்கள் கட்டிய அரக்கு மாளிகை இருந்துள்ளது. எனவே இவ்விடத்தை ஹிந்துக்கள் தங்களுடையது என்று உரிமை கொண்டாடி வந்தனர்.உத்தரப் பிரதேசம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள அவ்விடம் காலப்போக்கில் பெயர் மாற்றமடைந்து பர்நாவா என்று தற்போது அழைக்கப்படுகிறது.100 பிகா (சுமார் 63 ஏக்கர்) நிலத்தை உத்தரப்பிரதேச அரசு பல வருடங்களுக்கு முன்பே ஹிந்துக்களுக்கு வழங்கியுள்ளது. அங்கு ஒரு மண்டபம் உள்ளது.பாபரைக் கொண்டாடுவோர் வழக்கம் போல் 100 பிகா நிலமும், அங்குள்ள கல்லறையும் (மண்டபம்) தங்களுக்குரியது என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். 1970 இல் முகிம் கான் என்பவர் இது பத்ருதீன் ஷாவின் கல்லறை என்றும், வக்ஃப் வாரியத்திற்குரிய நிலம் என்று உரிமைகோரி வழக்குத் தொடர்ந்தார். இடம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி 53 வருடங்களாக வழக்கு நீதி மன்றத்தில் இருந்து வந்தது. 100 ஏக்கர் நிலமும், கோபுரம் போன்ற நினைவுச் சின்னமும் ஹிந்துக்களுக்குரியது என்று நீதி மன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது. ஹிந்துக்களுக்குச் சொந்தமான பல ஆயிரக்கணக்கான இடங்களை இம்மாதிரி உரிமை கோரி வீண் சச்சரவினை ஏற்படுத்தி வருகின்றனர்.