1,643 கி.மீ. நீளமுள்ள பாரத – மியான்மர் எல்லை முழுவதிலும் பாதுகாப்பு வேலி அமைத்திட மத்திய அரசு முடிவு செய்துள் ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு.பாரத – மியான்மர் எல்லைப் பகுதிகளை விழிப்புடன் தீவிரமாக கண்காணிக்க உயர்தரமான தடங்கள் அமைக்கப்படும். மணிப்பூர் எல்லையில் உள்ள மோரேவில் 10 கி.மீ. தூரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது.அருணாசல பிரதேசம் & மணிப்பூரில் தலா ஒரு கி.மீ. தூரத்திற்கு முன் மாதிரியாக (Pilot Project) உயர் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு எல்லைகளைக் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் 20 கி.மீ. தூரத்திற்கு மணிப்பூர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளது. விரைவில் அப்பணி தொடங்கிடும். உள்நாட்டுப் பாதுகாப்பை விட அதிக முன்னுரிமை அளிக்க வேண்டியது எல்லைகளைப் பாதுகாப்பதே ஆகும். மத்திய அரசு எல்லைப் பகுதிகளைப் பாதுகாத்திட எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.