ஸ்ரீராம் லல்லாவிற்கு சிறை கைதியின் நிதி

0
49

கைதி சிறை ஊதியத்தை ராம் லல்லாவுக்கு அனுப்பினார். ஃபதேபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜியாவுல் ஹசன் என்ற கைதி, துடைப்பம் செய்ததில்  கிடைத்த ஒன்றரை மாத சம்பளத்தை ஸ்ரீ ராம்லாலாவுக்கு அர்ப்பணித்துள்ளார்.ஃபதேபூர் ராம்ஜானகி புரத்தில் வசிப்பவர் சிராஜ் ஹசனின் மகன் ஜியாவுல் ஹசன்.கைதியின் கோரிக்கையை ஏற்று சிறை கண்காணிப்பாளர் ரூ.1075 காசோலையை  கரசேவகபுரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பிராணப்  பிரதிஷ்டைக்கு முன்னதாக ஜனவரி 17ஆம் தேதி காசோலை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கரசேவகபுரத்தின் கருவூல உதவியாளர் வீரேந்திர குமார் ‘ கைதியின்  காசோலை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here