இந்தியத் தொழிற்துறையின் பிதாமகர் என்று போற்றப்பட்ட ஜம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம் இன்று

0
67

உப்பு முதல் கணினி வரை உற்பத்தி செய்யும் டாடாகுழும நிறுவனங்கள் உலகெங்கிலும் 54 நாடுகளில் அமைத்துள்ளன. 210 நாடுகள் டாடா தயாரிக்கும் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய பெருமைமிகு நிறுவனத்தின் தோற்றத்திற்கு காரணம் ஜம்ஷெட்ஜி டாடா

குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தவர் (1839). இவரது தந்தை பம்பாயில் ஒரு ஏற்றுமதி-வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்
ஜம்ஷெட்ஜி 14-வது வயதில் மும்பைக்கு வந்தார். எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்து வந்த இவர், 1858-ல் படிப்பு முடிந்தவுடன் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தந்தையின் நிறுவனத்தின் கிளைகள் ஜப்பான், சீனா, ஐரோப்பா, அமெரிக்காவில் உருவாக்கினார்.

1868-ல் ரூ.21,000 முதலீட்டில் திவாலாகிப்போன ஒரு எண்ணெய் ஆலையை வாங்கி அதைப் பருத்தி ஆலையாக மாற்றி, அலெக்ஸாண்டிரா மில்ஸ் என்று பெயரிடு சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இவரது ஆலைகளில் தயாரிக்கப்பட்ட துணிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டன.

இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்ற நான்கு இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றை எட்டுவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார். தற்போது இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ் யமாகத் திகழும் டாடா குழுமத்துக்கு அஸ்திவாரமாக இவை அமைந்தன.

1892-ல் ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் அமைப்பான ஜே.என். டாடா என்டோவ்மன்ட் என்னும் அமைப்பை நிறுவினார். 1898-ல் பெங்களூரில் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்காக தன் நிலத்தை நன்கொடை யாக வழங்கினார்.

இந்தியத் தொழிற்துறையின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர், 1904-ம் ஆண்டு தன் 65-வது வயதில் காலமானார்.

இவரை கவுரவிக்கும் விதமாக ஜார்க்கண்டில் உள்ள ரயில் நிலையத்துக்கும் ஒரு ஊருக்கும் டாடாநகர், ஜம்ஷெட்பூர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவரது பெயரில் தபால் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here