நேபாள இளைஞர்கள் பலரை பொய் வாக்குறுதி அளித்து ரஷ்ய சார்பில் போரிட உக்ரைன் போர் முனைக்கு அனுப்பி வைத் துள்ளனர். நேபாள தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு எவ்வித உதவியையும் செய்யவில்லை. அவர்களைக் காப்பாற்றி அழைத்து வர பாரத அரசின் உதவியை நாடியுள்ளது நேபாள அரசு. சுமார் 15,000 நேபாள இளைஞர்கள் உக்ரைன் போர் முனையில் சிக்கியுள்ள னர். பலர் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.பெரும்பான்மையான இளைஞர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிடவே விரும்பு கின்றனர்.உக்ரைன் போர் முனையில் சிக்கித் தவிதத நமது நாட்டு இளைஞர்கள் 36 பேரை வெற்றிகரமாக மீட்டு வந்துள்ளதை சுட்டிக் காட்டி பாரதத்தின் உதவியை நேபாளம் நாடியுள்ளது.