தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய ஹாக் போர் விமானங்கள்!

0
258
நேற்று இந்திய விமானப்படையின் எஸ்யு -30 மற்றும் ஹாக் போர் விமானங்கள் அவசரகாலத் தரையிறங்கும் பயிற்சியின் போது வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டன.  அதே நேரத்தில் ஏஎன் -32 மற்றும் டோர்னியர் போக்குவரத்து விமானங்கள் வெற்றிகரமாகத் தரையிறங்கியதுடன், பின்னர் அங்கிருந்து புறப்பட்டும் சென்றன.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாவட்ட நிர்வாகம், மாநில காவல்துறை போன்ற சிவில் ஏஜென்சிகளுக்கும்  இந்திய விமானப்படைக்கும் இடையே உயர்மட்ட ஒருங்கிணைப்பு  மற்றும் புரிதல்கள்  இருப்பதை இந்தச் செயல்பாடு வெளிப்படுத்தியது.
முன்னதாக, இந்த பயிற்சி கடந்த 2022  டிசம்பர் 29 அன்று நடத்தப்பட்டது. 4.1 கி.மீ நீளமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் விமான ஓடுதளம் இந்திய விமானப்படை வழங்கிய விவரக்குறிப்புகளின்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் மற்ற விமான ஓடுபாதைகள் செயல்பட்டு வரும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்த அவசரகால ஓடுபாதை  தீபகற்ப இந்தியாவில் அண்மையில் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
இந்த பயிற்சியினால் விமானபடையின் தரையிறங்கும் திறமை மேம்படுகின்றன. மேலும் இதன் மூலம் தொலைதூரப்  பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் வழங்கவும், பேரழிவின் போது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here