\1757 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் ஹிந்துக் கள் மதுரா & ப்ருந்தாவனத்தில் கூடியிருந்த னர். அந்நேரத்தில் அஹமத் ஷா அப்தாலியும் அவனுடைய படையினரும் திரண்டிருந்த ஹிந்துக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தி னர். இதில் வெளியூர், உள்ளூர் ஹிந்துக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப் பட்டனர். ஜாட் இளவரசர் ஜவஹர் சிங் 5,000 பேர் கொண்ட படையுடன் வந்து மதுராவிற்கு வெளியே சுற்றுப்புற கிராமங்களில் அஹ்மத் ஷா அப்தாலியின் படைகளை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் அது பெரும் தோல்வியில் முடிந்தது. 9 மணி நேரம் நடைபெற்ற போரில் ஜவஹர் சிங்கின் படை வீரர்கள் 3,000 பேர் வீர மரணத்தை தழுவினர். இதனால் கோகுலத்தை நோக்கி அப்தாலியின் படைகள் முன்னேறின. அஹமத் ஷா அப்தாலியின் படைகளை எதிர்த்து நாகா சாதுக்கள் மிக ஆக்ரோஷத் துடன் போர் புரிந்து வெற்றி பெற்றனர். இதில் சுமார் 2,000 க்கும் அதிகமான நாகா சாதுக்கள் வீர மரணத்தைத் தழுவினர். அவர்கள் செய்த வீரம் நிறைந்த போரினால் கோகுலத்தில் ஹோலி கொண்டாடத் திரண்டிருந்த இந்துக்களும், ஆலயமும் காப்பாற்றப்பட்டது. ஹோலிப் பண்டிகை கொண்டாடும் முன் தர்மத்தைக் காத்திட்ட நாகா சாதுக்களை நினைத்திடுவோம்.