டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி

0
1290
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார்.

அடுத்ததாக 177 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here