நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேன்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் தினம் இன்று (ஆகஸ்ட் 23). இந்த நாள், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.
நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக இந்திய விண்ணில் ஏவியது.இந்த விண்கலத்தில் இருந்து வந்த லேண்டர், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டும் நிலவை ஆய்வு செய்த அந்த நாள், இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.அதை கொண்டாடும் வகையில், ஆண்டு தோறும் ஆக.,23 தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இன்று முதலாம் தேசிய விண்வெளி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஓராண்டு நிறைவுயையொட்டி, நிலவு குறித்து சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவல்களை இந்திய விண்வெளித் துறையின் ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: