“மதன் மோகன் மாளவியா ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட அறிவியலை ஒரு கருவியாக பயன்படுத்தினார்” என்று விஞ்ஞான் பாரதியின் அகில பாரதிய அமைப்பு செயலாளர் ஜெயந்த் சஹ்ஸ்ரபுத்தே கூறியுள்ளார்.
பாரத் ரத்னா பண்டித மதன் மோகன் மாளவியாவின் 160வது பிறந்த நாளில் பேசிய அவர் “இந்தியர்களுக்கு தொழில் முனைவோர் ஆகும் தகுதி இல்லை என்று ஆங்கிலேயர் அமைத்த குழு அறிக்கை கூறியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக மாளவியா ‘பண்டைய காலங்களில் இந்தியா எவ்வாறு தொழில்துறையில் முன்னணியில் இருந்தது’ என்ற உண்மை அடிப்படையிலான அறிக்கையை எழுதி, இந்தியர்கள் யார்? அவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்பதை ஆங்கிலேயர்களுக்குக் காட்டினார். மேலும் அறிவியலின் முக்கியத்துவம் தெரிந்திருந்த அவர் இந்தியாவை அறிவியல் துறையில் முன்னணியில் ஆக்க உதவினார் ” என்றும் அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.