அரங்கசாமி நாயக்கர்-நினைவு தினம்-ஜனவரி 6

0
659

அரங்கசாமி நாயக்கர் (1884 பிப்ரவரி 6 – 1943 ஜனவரி 6) பிரெஞ்சிந்தியா என அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்; தமிழறிஞர். ‘பிரெஞ்சிந்திய காந்தி’ என்று அழைக்கப்பட்டவர்.
பிறப்பு
அரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். அவர் பெற்றோரைப் பற்றி அறிய இயலவில்லை. இவர் புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு வட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தார்.
பொது வாழ்க்கை
பிரஞ்சு நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடினார். திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர்.
இதழும் படைப்புகளும்
அரங்கசாமி நாயக்கரும் அவர்தம் நண்பர்களும் இணைந்து பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிக்கை என்னும் இதழை வெளியிட்டனர். அதில் விடுதலைப் போராட்டச் செய்திகளும் தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றன.
அரங்கசாமியார் அவ்விதழில் தமிழிலக்கணம் பற்றிய பல கட்டுரைகளை எழுதினார். காரைக்கால் வ. பொன்னையா, திருநள்ளாறு தேனூர் பாலசுப்பிரமணியம் என்னும் இருவரும் அக்கட்டுரைகளைத் தொகுத்து குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம் என்னும் நூலாக 1944 பிப்ரவரி 3 ஆம் நாள் வெளியிட்டனர்.
மறைவு
இவர் 1943 சனவரி 6 ஆம் நாள் காலமானார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here