ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்லூரியான Baaliyol கல்லூரியின் கட்டிடத்திற்கு இந்தியரான டாக்டர்லக்ஷ்மன் சொருப்பின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் பலகலை கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை(DPhil) சமர்ப்பித்த முதல் மாணவர் டாக்டர்லக்ஷ்மன் சொருப் என்பது குறிப்பிடத்தக்கது. 1917 இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் DPhil பட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, விண்ணப்பித்த இரண்டு மாணவர்களில் டாக்டர் சொரூப் ஒருவர். மற்றொருவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ப்ரோன்டே கேடன்பை.