திருச்சி மாவட்டம் நெடுங்கூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பெண் குரங்குகள் உட்பட 24 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் உறுதியாக தெரியவரும். இந்நிலையில், குரங்குகளுக்கு விஷம் கொடுத்து அந்த இடத்தில் வீசியிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரங்குகளின் உடலில் எதுவும் காயம் இல்லை. இது விசாரிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.