ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில், ராணுவ குழுவினர் தேசிய கொடியை பறக்க விட்டனர்

0
100

நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் ஓராண்டாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ‘மிஷன் ஹர் ஷிகர் திரங்கா’ என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மிக உயரமான மலை சிகரத்திலும், முதன் முறையாக தேசியக் கொடியை பறக்கவிட திட்டமிடப்பட்டது. இதற்காக, கர்னல் ரன்வீர் சிங் ஜாம்வால் தலைமையில், 15 பேர் அடங்கிய ராணுவ குழுவினர் நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சி, அருணாச்சல பிரதேசத்தில் நிமாஸ் மலை சிகரத்தில் துவக்கப்பட்டது. 19-வது மாநிலமாக தமிழகத்தில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 2,623 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டாவுக்கு இந்த குழுவினர் நேற்று வந்தனர். தோடர் பழங்குடியினர் பெண்கள் தேசபக்தி பாடல்களை பாடினர். தொட்டபெட்டா சிகரத்தில் தேசிய கொடியை பறக்க விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here