கேரளவைச்சேர்ந்த 8 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தீப்தி மர்லா என்ற மரியம், முகமது வக்கார் லோன் என்ற வில்சன் காஷ்மீரி, மிஷா சித்தீக், ஷிஃபா ஹரிஸ் என்ற ஆயிஷா, ஒபைத் ஹமீத் மட்டா, அப்துல்லா என்ற மாதேஷ் சங்கர், அம்மார் அப்துல் ரஹிமான் மற்றும் முஸாமில் ஹாசன் பட் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த முகமது அமீன் என்ற அபு யாஹ்யா மற்றும் அவரது கூட்டாளிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக என்ஐஏ கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
யாஹ்யா மற்றும் அவரது கூட்டாளிகள், ISISன் வன்முறை ஜிஹாதி சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதற்கும், ISIS க்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், டெலிகிராம், ஹூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்களில் பல்வேறு ISIS பிரச்சார சேனல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது