ஊடக அங்கீகாரங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டிருக்கிறது.
இந்த வழிகாட்டுதல்களின் படி…
1, ஊடகத்தின் பத்திரிகையாளர் / நிருபர் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு பாதகமான முறையில் செயல்பட்டால் அல்லது கடுமையான அடையாளம் காணக்கூடிய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டால், (அவர் பணி புரியும்?) ஊடகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும்.
2, கண்ணிய குறைவு, நெறிக்கு முரணாக செயல்படுவது (morality), நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்திற்கு தூண்டுதல் போன்ற பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஊடகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும்.
3, டிஜிட்டல் ஊடகங்களுக்கு, அவர்களது எடிட்டர் இந்தியராக இருக்க வேண்டும் (Indian national). அவற்றின் அலுவலகம் (registered office) இந்தியாவில் இருக்க வேண்டும். நிருபர்கள் டில்லியில் இருக்க வேண்டும்
4, வெளிநாட்டு செய்தி ஊடகங்களில் பணிபுரியும் ஃப்ரீலான்ஸ் (freelance) பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது.