மத்திய அரசின் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு தரப்படும் பணத்தை, இனி மாநில அரசுகள் தங்கள் இஷ்டப்படி செலவு செய்யவோ அல்லது ஆளும் கட்சி தலைவர்களின் பெயர்களை சூட்டி மாற்றவோ முடியாதவாறு மத்திய அரசு ஒரு விஷயத்தைச் செய்துள்ளது. அதாவது மத்திய அரசின் திட்டங்களுக்கான மதிப்பீடு, 500 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், மாநில அரசுக்கு நேரடியாக நிதி கிடைக்காது. இந்த நிதியை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பல மாநில அரசுகள், மத்திய அரசின் நிதியை இப்படி தவறாக பயன்படுத்துவதால், இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என சொல்லப்படுகிறது.