இந்திய கலாச்சாரத்திற்கு பொருந்தாத ஊர்களின் பெயர்கள் மாற்றப்படும் என அசாம் முதல்வர் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் அசாம் அரசாங்கம் இதற்காக ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது, மக்கள் அந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். இந்திய கலாச்சாரத்திற்கு பொருந்தாத மற்றும் இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.