உக்ரைன் விரட்டியடித்தது: இந்தியா காப்பாற்றியது ; மோடிக்கு நன்றி சொன்ன பாக்., பெண்

0
451

ரஷ்யா தாக்குதல் காரணமாக உக்ரைனில் தவித்து வந்த இந்திய மாணவர்களை ‘ஆபரேசன் கங்கா’ திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.

இதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது. உக்ரைன் அண்டை நாடுகளுக்கு மாணவர்களுக்கு அழைத்து வரப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்திய மாணவர்களுடன் பல வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் உக்ரைனில் இருந்து மீட்கப்படுகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஷபீக் என்ற பெண்ணும் கீவ் நகரில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார்.

உக்ரைனில் இருந்து தன்னை பாதுகாப்பாக மீட்டதற்காக அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here