நீலகிரி மாவட்டம், கட்டப்பெட்டு பெட்டுமந்தையை சேர்ந்த, ஜெயாமுத்து மற்றும் தேஜம்மாள் ஆகியோர், தோடர் கலாசாரத்தை பேணிக்காக்கும் வகையில், ‘எம்பிராய்டரி’ வேலைபாடுகளை, இளம் தலைமுறையினருக்கும் கற்பித்து வருகின்றனர்.இவர்களது பணியை போற்றும் விதமாக, டில்லியில் நடந்த தேசிய மகளிர் தினவிழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருவருக்கும் சிறந்த தொழில் முனைவோருக்கான, மகளிர் சக்தி விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ஜெயாமுத்து, தேஜம்மாள் கூறுகையில்,’எங்களுக்கு, எம்பிராய்டரி தயாரிக்கும் ஆர்வத்தை, கிராம முதியோர் ஊக்குவித்தனர். கரூரில் இருந்து நுால் வாங்கி இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.