கேரளாவைச் சேர்ந்த 23 வயதுள்ள எம்.டெக். படித்துள்ள இளைஞன் ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பிற பயங்கரவாத குழுக்களுடன் போரிட்டத்தில் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டான்.
இவனது உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை. ‘நஜீப் அல் ஹிந்தி’ என்ற பெயரில் இவன் கொல்லப்பட்ட செய்திகள் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் கோரசன் ப்ராவின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பெண் பயங்கரவாதி ஒருத்தியை திருமணம் செய்துள்ளான். மனித வெடிகுண்டாக செயல்பட்டதால் அதில் கொல்லப்பட்டுள்ளான்.
எத்தனையோ இளைஞர்கள் இந்த மாய வலையில் சிக்கி மாண்டு போகின்றனர்.