குஜராத்தில், முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மாநில கல்வி அமைச்சர் ஜீது வகானி பகவத் கீதை நூலில் கூறப்படும் வாழ்க்கை நெறிமுறிகள், கோட்பாடுகள், அனைத்து மதத்தினராலும் ஏற்கப்பட்டுள்ள ஒன்று. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. நம் கலாசாராம், பண்பாடு, அறிவுக் களஞ்சியங்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்.குஜராத்தில், வரும் 2022 – 2023 கல்வியாண்டில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான பாடதிட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்படும்.இதைத் தவிர, பகவத் கீதையின் அடிப்படையில் பல போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாடபுத்தகம் உள்ளிட்டவை பள்ளிகளுக்கு வழங்கப்படும்.