இந்தியாவில், பல நுாற்றாண்டுகளாக நீடித்த காலனி அரசு, நம்மை நாமே தாழ்ந்த இனமாக கருதக் கற்றுக் கொடுத்தது. நம் கலாசாரம், பாரம்பரிய அறிவாற்றலை நாமே வெறுக்கும்படி சொல்லிக் கொடுத்தது. புறக்கணிக்க வேண்டும் இதனால், நம் நாட்டின் வளர்ச்சி மந்தமடைந்தது. சமூகத்தின் ஒரு சிறிய பிரிவினருக்காக, அன்னிய மொழி பாடத்திட்டம் புகுத்தப்பட்டது. பெரும்பான்மை மக்கள் கல்வி கற்கும் உரிமையை இழந்தனர். இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டில், மெக்காலே கல்வித் திட்டத்தை முழுதுமாக புறக்கணிக்க வேண்டும். நம் கலாசாரம், பாரம்பரியம், நம் முன்னோர்கள் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நாம் காலனி ஆதிக்க மனோநிலையை கைவிட்டு, நம் குழந்தைகளுக்கு இந்தியாவின் அடையாளத்தை கற்றுக் கொடுப்பதில், பெருமிதம் அடைய வேண்டும். நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவுக் களஞ்சியங்களான வேதங்களை படித்து பொருளறிய, சமஸ்கிருதத்தை கற்க வேண்டும். தாய் மொழி நம் கண் போன்றது. அன்னிய மொழி கண்ணாடி போன்றவை.அனைத்து மாநிலங்களும் அவற்றின் தாய் மொழியில் அரசாணைகள் பிறப்பிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். புதிய கல்விக் கொள்கை, தாய்மொழியை ஊக்குவிப்பதுடன், கல்வித் திட்டம் இந்தியமயமாவதற்கு அச்சாணியாக விளங்கும். ஹிந்துத்வா கல்வியை புகுத்த முயற்சிப்பதாக, சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதில் என்ன தவறு உள்ளது என தெரியவில்லை.நம் கொள்கை நம் பண்டைய நுால்கள், ‘உலகம் ஒரே குடும்பம்; அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.