ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டிலிருந்து முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) வழியாக பயங்கரவாத ஊடுருவல் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவை எம்பி ரஞ்சன்பென் தனஞ்சய் பட்டின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நித்யானந்த் ராய், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2018 ஆம் ஆண்டு முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவல் கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் கடந்த நான்கு ஆண்டுகளில் 366 ஊடுருவல் நடந்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தகவலின்படி பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல்வேறு ஏவுதளங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என தெரிவித்த நித்யானந்த் ராய், எல்லை தாண்டிய ஊடுருவலைக் கட்டுப்படுத்த அரசு பன்முக அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளது என தெரிவித்தார்.