ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று டெல்லி வருகை!

0
545

 

ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும். கடந்த 2020ம் ஆண்டு வெளியான தரவுகளின்படி, இந்திய ஏற்றுமதிகளுக்கு (மொத்தத்தில் 14%) அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாவது பெரிய இடமாகும்.மறுமுனையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 10வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருட்களின் வர்த்தகம் 12.5% அதிகரித்துள்ளது.மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு முதலீட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு 8% முதல் 18% வரை இருமடங்காக அதிகரித்துள்ளது.சுமார் 6,000 ஐரோப்பிய நிறுவனங்கள், இந்தியாவில் நேரடியாக 17 லட்சம் வேலைவாய்ப்புகளையும், மறைமுகமாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளையும் பரந்த அளவிலான துறைகளில் வழங்குகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here