இலங்கைக்கு இந்தியா கூடுதலாக கடனுதவி!

0
314

பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக இந்தியா கூடுதலாக ரூ.3,750 கோடி கடனுதவி வழங்க இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கையில் வரலாறு காணாத வகையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தேவைக்கேற்ற விநியோகம் இல்லாத காரணத்தால் விலைவாசி விண்ணை தொட்டது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்துள்ளது. நிலைமையை சீரமைக்க இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.எரிபொருள் கொள்முதலுக்காக இந்தியா கூடுதலாகரூ.3,750 கோடி கடனுதவியை வழங்க உள்ளது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here