பணமோசடி – கேரளாவைச் சேர்ந்தவரின் அபுதாபி ஹோட்டல் மூலம் உத்தரபிரதேசத்தில் வகுப்புவாத பதட்டங்களை உருவாக்குவதற்காக PFI க்கு உதவியாக  செயல்பட்டது.

0
338

லக்னோ. வகுப்புவாத மற்றும் ஜிஹாதி நடவடிக்கைகளை உருவாக்குவதற்காக உத்தரபிரதேசத்திற்கு பணம் அனுப்பியதாக ஹோட்டல் உரிமையாளர் அஷ்ரஃப் எம்கே மற்றும் அப்துல் ரசாக் பீடியாக்கல் என்ற அப்துல் ரசாக் பிபி ஆகியோருக்கு எதிராக ED வெள்ளிக்கிழமை லக்னோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

உத்தரபிரதேசத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்க அபுதாபியில் உள்ள ஹோட்டலில் இருந்து சர்ச்சைக்குரிய ஜிஹாதி அமைப்பான PFI க்கு பணம் அனுப்புவதை ED கண்டறிந்துள்ளது.

அறிக்கைகளின்படி, இந்த ஹோட்டல் கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் எம்.கே என்ற அஷ்ரஃப் காதிருக்கு சொந்தமானது, அவர் UAE-ஐ தளமாகக் கொண்ட தனது நிறுவனங்கள் மூலம் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தீவிர PFI உறுப்பினராகவும் உள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட அஷரப் மற்றும் அப்துல் ரசாக் இருவரும் கடந்த சில மாதங்களாக சிறையில் உள்ளனர். உணவகத்தின் உரிமையாளர் அஷ்ரப், PFI இன் எர்ணாகுளம் மாவட்டத் தலைவராக இருந்தார், மேலும் கல்லூரித் தேர்வுக்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான கேள்வியைக் கேட்டதற்காக கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கையை வெட்டினார் என்று குற்றம் சாட்டப்பட்டார். எனினும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

வரும் நாட்களில் இதுபோன்ற குற்றப்பத்திரிகைகள் ஏஜென்சியால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு கேரளாவில் உருவாக்கப்பட்ட மற்றும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட PFI மீது ED 2018 ஆம் ஆண்டு முதல் CAA எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் 2020 இல் டெல்லியில் நடந்த வகுப்புவாத கலவரங்களுக்கு “நிதி” வழங்கியதாக கூறப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்தி வருகிறது.

தமிழில்: சகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here