ஜம்மு – காஷ்மீரில் இயங்கி வரும் ஜே.இ.எல்., அமைப்பை, மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு தடை செய்து, 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த அமைப்புக்கு தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவது தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.ஜே.இ.எல்., பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடந்தது.குறிப்பாக ஜம்மு மற்றும் தோடா மாவட்டங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.