சக்ஷம் அகில பாரத தலைவர் மற்றும் அகில பாரத அமைப்புச் செயலர் கன்னியாகுமரி வருகை

0
430

இரணியல்: சக்ஷம் அமைப்பின் மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கூட்டம் இரணியல் சக்ஷம் பவன் காரியாலயத்தில் நடைபெற்றது. காலையில் அஷ்டோத்திர ஜெயந்தி விழா நடைபெற்றது. மதியம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அகில பாரத அமைப்புச் செயலர் ஸ்ரீ சந்திரசேகர்ஜி நமது அமைப்பு மாவட்டத்தில் எல்லா இடத்திலும் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமைப்பை வலுப்படுத்த நாம் வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றும், வரும் டிசம்பர் 11ஆம் தேதி நாகர்கோவில் நடக்கும் மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு நாம் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக அதில் பாரத தலைவர் மற்றும் அகில பாரத அமைப்புச் செயலர் சக்ஷம் காரியாலயத்தில் நடைபெறுகின்ற தையல் மற்றும் கணினி பயிற்சி மையத்தை பார்வையிட்டு சக்ஷம் பொறுப்பாளர்கள் செய்து வரும் வேலையை பாராட்டினார். விழா ஏற்பாடுகளை மாநில தலைவர் ஸ்ரீ வேலுமயில் தலைமையில் மாவட்டம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here