அருளுக்கு நிவேதனமாய்,
அன்பினுக்கோர் கோவிலாய்,
அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிராய்,
எமதுயிர் நாடாம் பயிர்க்கு மழையாய்,
புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன். (மஹாகவி பாரதி)
தேசியம் ஈன்ற விழிப்புணர்விற்கு
பாரதத் திருநாட்டில், ஈன்ற தாய் விவேகானந்தர் என்றால்
மொய்ம்புடனே வளர்த்த இதத்தாய் சகோதரி நிவேதிதை ஆவார்.
எதிர்கால இந்திய மகற்கு நற்செவிலியாய், தாதியாய், நண்பியாய் ஆகி நிற்பாய் என்று தம் சிஷ்யையை வரவேற்கிறார் ஸ்வாமி விவேகானந்தர்.