அயோத்தியில் பிரமாண்டமாக ஸ்ரீராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இந்த கோயிலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவை தடை செய்யப்பட்ட பகுதியாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து பேசிய அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத்தலைவர் விஷால் சிங், “அயோத்தி மெகா திட்டம் 2031’ன்படி ஸ்ரீராமர் கோயிலை சுற்றியுள்ள 500 மீட்டர் சுற்றளவு பகுதிகள் ஹிந்து மத சடங்குகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை.ஸ்ரீராம ஜென்மபூமியின் பாதுகாப்பு மற்றும் ஸ்ரீராமர் கோயிலின் புனிதத்தன்மையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் கட்டப்படும் கட்டடங்களின் அதிகபட்ச உயரம் 7.5 மீட்டராக மட்டுமே இருக்க வேண்டும்.நீர்த்தேக்கங்கள், குளங்கள், பிற நீர் ஆதாரங்கள், வடிகால் ஆதாரங்களின் பாதுகாப்பும் இந்த மெகா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே, அத்தகைய இடங்களில் ஆறு மீட்டர் சுற்றளவில் எந்த கட்டுமானத்துக்கும் அனுமதியில்லை” என்று தெரிவித்தார்.