ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டிஜிட்டல் கரன்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ரிசர்வ் வங்கி எந்த அவசரமும் காட்டவில்லை. பொறுமையான முறையில் இதனை ஒரு நிலையான மாற்றமாகவே மக்களிடம் ஏற்படுத்த விரும்புகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில், ஐந்து நகரங்களில் எட்டு வங்கிகளுடன் இணைந்து 5தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில்லரை வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கரன்சி வெள்ளோட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. அது சிறப்பாக செயல்படுவதால், தற்போது இந்த வெள்ளோட்டத்தை ஒன்பது நகரங்களுக்கு விஸ்தரிப்பதோடு இதில் கூடுதலாக ஐந்து வங்கிகளும் இணைக்கப்பட உள்ளன. டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகள் மெதுவாக, சீராக அதிகரித்து வருகின்றன. இதுவரை சுமார் 7.7 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன” என கூறினார்.