சிக்கிமில் நாதுலா என்ற பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அங்கு மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.
சிக்கிமிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகளில் வருவது வழக்கம். அம்மாநிலத்தின், மிகவும் பிரபலமான நாதுலா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 22 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்