அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்களுக்கிடையேயான எல்லை பிரச்னை மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது. அசாம், அருணாச்சல் பிரதேச இடையே 804 கி.மீ. தூரம் எல்லையை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்கின்றன. இதில் எல்லைப்பகுதியில் உள்ள 123 கிராமங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த 10 ஆண்டுகளக பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முன்னிலையில் கடந்தாண்டு ஜூலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு மாநில முதல்வர்களிடையே சுமூகமான முறையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அசாம் முதல்வர் ஹிந்தா பிஸ்வா சர்மா, அருணச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகிய இருவரிடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.