1. நாராயணன் பட் – கங்கா பாய் இணையருக்கு பித்தூரில் 19 மே 1824இல் பிறந்த நானா சாகிப்பின் இயற்பெயர் நானா கோவிந்த் பந்த்.
2. முதல் சுதந்திரப் போரின் முன்னோடி வீரர்.
3. மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிடம், பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் தலைமையிலான மராத்தியப் பேரரசு தோற்றது. பாஜி ராவை பிரித்தானிய கம்பெனி ஆட்சி, கான்பூர் அருகே உள்ள பித்தூரில் கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கியது.
4. நானா சாகிப்பின் பெற்றோர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மராத்தியர்கள் பித்தூருக்கு புலம் பெயர்ந்தனர். பித்தூரின் இரண்டாம் பாஜி ராவ் பேஷ்வா, 1827ஆம் ஆண்டில் நானா சாகிப்பை தத்து எடுத்து வளர்த்தார்.
5. 6 சூன் 1857இல் நானாசாகிப் தலைமையிலான 15 ஆயிரம் சிப்பாய்கள் கொண்ட படைகள், கான்பூரில் இருந்த கிழக்கிந்திய இராணுவத்தின் ஒரு பெரும் படையை மூன்று வாரங்கள் முற்றுயிட்டது.
6. படைக்கலன்களையும், செல்வத்தையும் கொள்ளையடித்து பின் தில்லியின் இரண்டாம் பகதூர் ஷா படைகளுடன் இணைந்து நின்று கிழக்கிந்திய இராணுவத்துடன் போரிட்டது. போரில் பல ஆங்கிலேயே மக்கள் நானா சாகிப் படைகளால் கைது செய்யப்பட்டனர். ஆங்கிலேயே படைத்தலவன் வீலர், நானா சாகிப்பிடம் சரண் அடைந்தான்.
7. ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்கு வீழ்ந்த நானா இறுதி வரை அவர்களிடம் பிடிபடாமல் இருந்தார்.
#nanasaheb #சான்றோர்தினம்