ஜம்மு & காஷ்மீரில் 34 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த முஹர்ரம் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஶ்ரீநகரில் முஹர்ரம் பேரணி குறிப்பிட்ட பாதையில் அமைதியாக நடைபெற்றது. ஷியா முஸ்லிம்கள் தான் முஹர்ரம் கடைபிடித்து வருகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமின்றி ஊர்வலத்தில் கலவரம் செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஜம்மு & காஷ்மீரில் சன்னி முஸ்லிம்களின் வசம் அரசு அதிகாரம் ஆதிக்கம் இருந்து வந்ததால் 34 வருடங்களாக காஷ்மீரில் ஷியாக்களுக்கு முஹர்ரம் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அரசியல் சட்டப் பிரிவு 370 அகற்றப்பட்ட நிலையில் ஷியா முஸ்லிம்களுக்கும் உரிமைகள் கிடைக்கின்றன.